வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 7500 உதவித்தொகை
அல்ஜீரியாவில் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் வேலை இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகின்றனர். தற்போது, வேலை இல்லாமல் வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்டெல் மத்ஜித் அறிவித்துள்ளார். வேலை இல்லாதவர்களும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்றும் அதற்காகவே இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி வேலை இல்லாத இளைஞர்களுக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என்றும் அல்ஜீரியா அதிபர் அறிவித்துள்ளார். அதிபரின் இந்த அதிரடி அறிவிப்பால் அந்நாட்டு இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.