வாரத்தில் 4 நாள் வேலை பெல்ஜியம் அரசு அறிவிப்பு!

ரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது. கடந்த, 2021 செப்டம்பரில் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளும் சோதனை அடிப்படையில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தன. எனினும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான், முதன் முதலாக, 2021 டிசம்பரில் நான்கு நாள் வேலையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து பாராளுமன்ற  ஒப்புதலுக்குப் பின், நான்கு நாள் வேலை திட்டம், வரும் மே அல்லது ஜூனில் அமலுக்கு வரும் என தெரிகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.