நெல்லை மலைநம்பி கோயில் தெப்ப உற்சவம்!!!
நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மலைநம்பி திருக்கோயில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி மலைநம்பி திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். சுமார் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலில் பெருமாள் நம்பி 5 நாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க திவ்ய தேசத்தில் திருக்குறுங்குடி பேரருளாளார் இராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் தை தெப்ப உற்சவம் 2 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.