10 வகை உணவுகள் உங்க தைராய்டு நோயை குணப்படுத்தும்!!

தைராய்டு சுரப்பி குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, முழுமையான உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பின் உறுதி, தசையின் உறுதி, புத்திக்கூர்மை எனப் பலவற்றுக்கு காரணமாக இருக்கிறது. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை ஊக்குவிப்பதும், புரதச் சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், சிறுகுடலில் உள்ள உணவிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதற்கும் தைராய்டு சுரப்பி தேவை. மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பது, உடல் செல்களில் பல என்சைம்களைத் தயாரித்துக் கொடுப்பது, பருவமடைவதற்கும் கருத்தரித்தலுக்கும் துணைபுரிவது ஆகியவற்றில் தைராக்சின் முக்கியப் பங்கு வகிக்கிறது.

காரணங்கள் :

உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்றவை தைராய்டு நோய்க்கு முக்கிய காரணமாகின்றன. பரம்பரை பரம்பரையாக வருவது, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பக்காலத்தில் தாய் சந்திக்கும் மன ரீதியிலான பிரச்சனைகள், தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, அடிக்கடி எமோஷனல் ஆகி ஸ்ட்ரஸ்க்கு உள்ளாவது, உடலுழைப்பு இல்லாமல் இருப்பது போன்றவை தான் தைராய்டு பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின் சத்து அதிகரித்தால் எந்தவித பாதிப்பும் வராது. எனவே, தைராய்டு நோயாளிகள் நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதோடு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது.

1.பால்

2.காளாண்

3.பசலைக் கீரை

4.முட்டை

5.தானியங்கள் : தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்க உதவும்.

6.தேங்காய் எண்ணெய்

7.உருளைக்கிழங்கு

8.பெர்ரீ

9. ப்ரோக்கோலி

10. கடல் உணவுகள் : கடலிருந்து கிடைக்க கூடிய மீன்,நண்டு முதலிய உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவற்றில் அயோடின் சத்து அதிகமிருக்கும். சால்மன் மீனில் விட்டமின் டி,ஒமேகா 3ஃபேட்டி ஆசிட் அதிமிருக்கிறது. ஃபேட்டி ஆசிட் உடல் தானாக சுரக்காது என்பதால அவற்றை நாம் உணவிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.