தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு உத்தரவு! 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் ஆவின் ஆணையர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவு:

  1. தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணைச் செயலாளர் அம்ரிதா ஜோதி, சமர சிக்‌ஷா கூடுதல் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
  2. நில நிர்வாகத்துறை இணை ஆணையராகப் பதவி வகிக்கும் கற்பகம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
  3. இ-சேவை இணை இயக்குனர் சரஸ்வதி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  4. பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் பொருட்கள் கூட்டமைப்பு லிமிடெட் துறை மேலாண் இயக்குனர் வள்ளலார், தொழில் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  5. தொழில் துறை ஆணையர் நந்தகோபால், பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் பொருட்கள் கூட்டமைப்பு லிமிடெட் துறை மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

6.கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் மாவட்ட கிராம அபிவிருத்தி (திருவாரூர் மாவட்டம்) கமல் கிஷோர் இ-சேவை இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.