சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை, திரையரங்கம் 750 ரூபாய் முதல் 2000 ரூபாய், மருத்துவமனையில் 2000 ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படும்.

மேலும் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்டட கழிவுகளை கொட்டினால் 5,000 ரூபாய், குப்பைகளை தரம்பிரித்து அளிக்கத் தவறினால் 5 ஆயிரம் ரூபாய், குப்பைகளை எரித்தல் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஹ்மான், செய்தியாளர்
தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.