பாலியல் வன்கொடுமை: ஆசிரியருக்கு ஆயுள் சிறை
பாண்டுங்: மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு இந்தோனீசிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஹெர்ரி விரவன் என்ற அந்த 36 வயது ஆசிரியர்,13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததையும் அவர்களில் எட்டு பேர் கருவுற்றதையும் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. அந்நாட்டில் உள்ள சமயம் சார்ந்த தங்குமிட பள்ளி ஒன்றில் ஐந்து ஆண்டுகளாக நடந்த இக்கொடுமையால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிறார்கள் ஆவர். பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் சென்ற ஆண்டு போலிசில் அளித்த புகாரைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என்றது நீதிமன்றம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.