இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது.ஒரு நாள் தொடரை முழுமையாக வசப்படுத்திய இந்திய அணி 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டுகிறது. இன்னும் 8 மாதத்தில் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணியில் சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் நல்ல அடித்தளமாக அமையும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.