ராஞ்சி: கால்நடைத்துறையில் ஊழல் செய்த குற்றச்சாட்டில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிகக்ப்பட்டுள்ளார். இது போன்று ஏற்கனவே கால்நடைத்துறை தீவன ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்த அவர் தற்போது ஜாமினில் உள்ளார் . தற்போது 5 வது வழக்கிலும் லாலு குற்றவாளி என நிரூபணம் ஆகி உள்ளது. கால்நடைத்துறைக்கு அரசு கஜானாவில் இருந்து பணத்தை (ரூ. 139. 35 கோடி) முறைகேடாக எடுத்த வழக்கில் இன்று ராஞ்சி சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி எஸ்.கே சசி தீர்ப்பளித்தார். இதில் குற்றவாளி என பிரகடனம் செய்ததுடன் அவருக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.
