மாத ஓய்வூதியம் அதிகரிப்பு….
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. பென்சன் தொகை உயர்வு.
தலைநகர் சிம்லாவில், முதலமைச்சர் ஜெய் ராம் தாக்குர் தலைமையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத குடும்ப ஓய்வூதியத்தை 3,500 ரூபாயில் இருந்து 9,000 ரூபாயாக அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 1.73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.