சிங்கப்பெருமாள் கோவில் – பிரபல ரவுடி கைது:
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதி ஜேஜே நகரை சார்ந்த பரணி வயது 38 இவர் பல அடிதடி கொலை கொள்ளை போன்ற வழக்குகளில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு சிங்கப்பெருமாள் கோயில் கடை உரிமையாளரை மிரட்டி பணம் வசூல் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்துள்ளார் இந்நிலையில் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் நேற்று சாலையில் செல்பவரை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் வந்துள்ளது இதை அடுத்து நேற்று காலை மறைமலை நகரை சேர்ந்த போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்துள்ளனர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.