கொட்டித் தீர்க்கும் கனமழை எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழ்நாடு புதுச்சேரியில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடகடலோர மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.