ஐ.நா.வின் அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் ‘பயங்கரவாத செயல்களால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு ஏற்படுத்திய அச்சுறுத்தல் மற்றும் அதை எதிர்கொள்வதில் உறுப்புநாடுகளுக்கு ஆதரவாக ஐ.நா. சபையின் முயற்சிகளின் வரம்பு குறித்த பொதுச்செயலாளரின் 14-வது அறிக்கைக்கு இந்தியாவின் எதிர்ப்பை பதிவு செய்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.