கொள்ளையடித்த லாரி விபத்துக்குள்ளானதில் பலி..!
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள சிறையில் இருந்து டோபியாஸ் கார் (வயது 38), ஜானி பிரவுன்(வயது 50), மற்றும் திமோதி சர்வர்(வயது 45) என்ற 3 பேர் கடந்த பிப்ரவரி 4 (வெள்ளிக்கிழமை) அன்று சிறையில் இருந்த காற்று துவாரம் வழியாக தப்பினர்.மறுநாள் அதிகாலை 4.30 மணியளவில், சிறையிலிருந்து 404 மைல் தொலைவில் உள்ள நார்த் கரோலினாவில் உள்ள ஸ்னீட்ஸ் பெரியில் உள்ள ஒரு கடையில் டோபியாஸ் மற்றும் சர்வர் இருவரும் கொள்ளையடித்தனர். கடையிலிருந்த எழுத்தரை கட்டி வைத்துவிட்டு, பணத்தைக் கொள்ளையடித்து, பின்னர் அவரது லாரியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த கொள்ளை சம்பவத்தை அறிந்த போலீசார் அவர்களை துரத்தினர். இதையடுத்து வேகமாக சென்ற இருவரும் லாரி விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தனர். அவர்கள் சுடப்பட்டார்களா? இல்லை வண்டி மோதியதால் உயிரிழந்தார்களா என்பதை போலீசார் தெளிவுபடுத்தவில்லை. டோபியாஸ், திமோதி சர்வர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.ஜானி பிரவுன் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அவர்கள் மூவரும் சிறையில் சந்திப்பதற்கு முன்பு ஒருவரையொருவர் தெரியுமா என்று இதுவரை தெரியவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.