இன்னும் நீதி கிடைக்கவில்லை: இந்தியா கவலை
நியூயார்க் :’மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதல்களில் பலியானோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ என, ஐ.நா.,வில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: இந்தியாவின் அண்டை நாடு, ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்கிறது. இந்த அமைப்புடன் இணைந்து, அல் – குவைதா, தெற்காசியாவில் செயல்படும் ஐ.எஸ் – கே ஆகிய அமைப்புகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றன.
மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் – இ – தொய்பாவுக்கு, ஜெய்ஷ் – இ – முகமது அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதை பல முறை ஆதாரங்களுடன் இந்தியா எடுத்துரைத்தும் அது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர் வெளியிட்டுள்ள பயங்கரவாத தடுப்பு அறிக்கையில் இடம் பெறவில்லை. வருங்காலத்திலாவது உறுப்பு நாடுகள் அளிக்கும் விபரங்கள் பாரபட்சமின்றி ஐ.நா., அறிக்கையில் இடம் பெறும் என நம்புகிறோம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.