தமிழக அரசு உத்தரவு!
நியாயவிலைக் கடை பணியாளர் களுக்கு தமிழக அரசு உத்தரவு!
பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன் டிசம்பர் 26-ம் தேதி 30-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
கடை ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசு ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 13ம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும்.
விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ம் தேதியிலிருந்து பரிசு தொகுப்பு
ரொக்க தொகை வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய் 2500 ரொக்கம் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் ரூ,2500யை உறையில் வைத்து வழங்கக்கூடாது என நியாய விலை கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்,