பிலிப்பைன்ஸில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி
பிலிப்பைன்ஸ் நாடு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. பிலிப்பைன்ஸ் வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, நெகட்டிவ் என்று பரிசோதனை செய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது..
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு சுற்றுலாத்துறை செயலாளர் பெர்னா ரோகுலோ-புயாட் கூறியதாவது: கொரோனாவால் கடுமையான பொருளாதார நெருக்கடியை பிலிப்பைன்ஸ் சந்தித்துள்ளது. எல்லையை மீண்டும் திறப்பதன் மூலம் வேலைகளை மீட்டெடுக்கும். சுற்றுலா தொடர்பான நிறுவனங்கள் மற்றும் சமூகங்களில் வருவாயை உருவாக்கும். மீட்சிக்கான பாதையில் அடுத்த அத்தியாயத்தை நாங்கள் தொடங்குவோம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.