வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்பு.. வைரலாகும் புகைப்படம்
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, நடிகர் சிம்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.