பாலஸ்தீனத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா…
பாலஸ்தீனத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 64 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைகளில், படுக்கைகளுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் அதிக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. காஸா, வெஸ்ட் பேங்க் போன்ற பகுதிகளில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்க அதிகாரிகள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பல பகுதிகளில் கொரோனா பரிசோதனை மையங்களும், தடுப்பூசி செலுத்தும் முகாம்களும் அதிகமாக திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.