உலக நாடுகளுக்கு கொரோனா பரவ காரணமாக இருந்த சீனா, தொற்று நோய் விவகாரத்தில் “பூஜ்ஜிய-சகிப்புத்தன்மை” அணுகுமுறையை கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் காரணமாக சீனா வைரஸ் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பெய்ஸ் நகரில் கடந்த சனிக்கிழமை முதல் திடீரென தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது. புதிவகை கொரோனாவான ஒமைக்ரான் தாக்கத்தால் அங்கு தொற்று அதிகரித்து வருவதாக தெரிகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.
