ஹாக்கி: இந்தியா கலக்கல் வெற்றி…
போட்செப்ஸ்ட்ரூம்:புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 5-0 என பிரான்சை வீழ்த்தியது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்களுக்கான புரோ ஹாக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது. 9 அணிகள் மோதும் இதன் மூன்றாவது சீசன் தற்போது நடக்கிறது. இதற்காக தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, நேற்று தனது முதல் போட்டியில் பிரான்சை சந்தித்தது. இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் 200 வது போட்டியில் களமிறங்கினார்.
போட்டியின் 21, 24 வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில், ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார் கோல் அடித்தனர். ஷம்ஷெர் சிங் (28 வது) தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் மன்தீப் சிங், 32வது நிமிடம், ஆகாஷ்தீப் சிங் 41வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.