பட்டாசுகளுக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு…
நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பசுமை பட்டாசுகளை தயாரிப்பதற்கு மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் ஊக்கப்படுத்துவதாகவும் உச்சநீதிமன்ற உத்தரவும் அதனையே குறிப்பிடுவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அஷ்வினி குமார் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1,433 பட்டாசு தொழிற்சாலைகளில் 58,597 தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.