சர்வதேச தலைவர்கள் பட்டியல் – பிரதமர் மோடிமுதலிடம்!!
வாஷிங்டன் : உலகின் 13 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் குறித்து அமெரிக்க தகவல் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்.அமெரிக்காவை சேர்ந்த, ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற தகவல் ஆய்வு நிறுவனம், சர்வதேச தலைவர்கள் குறித்து கருத்துக் கணிப்பு நடத்துகிறது. கருத்துக் கணிப்புஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 13 நாட்டு தலைவர்கள் குறித்து இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது. சமீபத்தில் அந்த நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், பிரதமர் நரேந்திர மோடி 72 சதவீத ஆதரவு பெற்று மூன்றாவது ஆண்டாக முன்னிலை வகிக்கிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.