டிசம்பர் 24 முதல் 2021- ஜனவரி 1 வரை
டிசம்பர் 24 முதல் 2021- ஜனவரி 1 வரை ஜூம் நிறுவனம்
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு!
Zoom Video Communications நிறுவனம் அதன் பயனீட்டாளர்களுக்குக் கிறிஸ்துமஸ் விடுமுறைப் பரிசாகக் கட்டுப்பாடற்ற அழைப்பு நேரத்தை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வழக்கமாக, Zoom இலவசக் கணக்குகள் வைத்திருப்போரின் அழைப்பு 40 நிமிடத்திற்குப் பின் துண்டிக்கப்படும். ஆனால் விடுமுறைக் காலத்தில் அந்தக் கட்டுப்பாடு அகற்றப்படவுள்ளது. கிருமிப்பரவல் சூழலில் மக்கள் பிரிந்திருக்கும் வேளையில் அவர்களை ஒன்றுசேர்க்கும் நோக்கத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறப்புச் சலுகை கிறிஸ்துமஸ் முன்தினம் 24 டிசம்பர் முதல் 2021 ஜனவரி 1 வரை நீடிக்கும்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.