அமெரிக்க சிறுவனுக்கு 100 ஆண்டு சிறை!!!!
வெர்சைல்ஸ்:தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த இரு குழந்தைகளை மூச்சு திணறடித்து கொன்ற சிறுவனுக்கு, அமெரிக்க நீதிமன்றம் 100 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் இண்டியானாபோலிஸ் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நிக்கலஸ் கெட்ரோவிட்ஸ். இவரது தந்தைக்கு இரண்டாவது திருமணம் வாயிலாக பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பிறந்தன. இதில், 2 வயதான பெண் குழந்தை, 2017 மே மாதம் வீட்டில் மூச்சு திணறி இறந்து கிடந்தது. அதன்பின், 2017 ஜுலையில், பிறந்து 11 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் மூச்சு திணறிய நிலையில் இறந்தது. போலீஸ் விசாரணையில், இரு குழந்தைகளையும் அவர்களது சகோதரன் நிக்கலஸ் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2018ல் நிக்கலஸ் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 13 வயது. மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நிக்கலஸ் குற்றவாளி என நிரூபணமானது. இதையடுத்து, 17 வயது சிறுவனான நிக்கலசுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.