நான் அரசு பள்ளியில் படித்தவன் என்பதால் உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன்.
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்த மாநிலம் தமிழகம். தமிழ்நாடு முதலமைச்சர் தகவல்!
கேரளா, டெல்லி மாநிலங்களை மேற்கோள் காட்டியவர்கள் இப்போது எங்கே போனார்கள்?*
தமிழக அரசு மீது திட்டமிட்டே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் 2000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்படும்.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் ஏழை மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
நான் அரசு பள்ளியில் படித்தவன் என்பதால் உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன்.
மருத்துவ படிப்பில் அடுத்த ஆண்டு 435 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.
என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ் .