2030-ஆசிய விளையாட்டு போட்டி
2030-ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்ற கத்தார்!
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் ஆசிய விளையாட்டு போட்டி கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்றது. தொடர்ந்து வரும் 2022-ம் ஆண்டுக்கான போட்டியை சீனாவிலும், அடுத்து 2026-ம் ஆண்டுக்கான போட்டியை ஜப்பானிலும் நடத்த உரிமையை பெற்று இருக்கின்றன. இந்நிலையில், 2030-ம் ஆண்டுக்கான 21-வது ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் நாடு எது? என்பது குறித்து விவாதிக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்த போட்டியை நடத்தும் உரிமத்தை பெற கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே இடையே கடும் போட்டி நிலவியதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்குப்பதிவில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 45 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
இந்த வாக்குகளின் முடிவில் அதிக வாக்குகள் பெற்ற கத்தாருக்கு 2030-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமம் வழங்கப்படுவதாகவும், 2-வது இடத்தை பெற்ற சவூதி அரேபியாவுக்கு 2034-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்தது.
ரசூல் மொய்தீன்
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.