நவநீதகிருஷ்ணன் எம்.பி கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்!

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எம்.பி நவநீத கிருஷ்ணனின் கட்சி பதவி பறிப்பு – ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கூட்டறிக்கை கனிமொழியை புகழ்ந்து பேசிய நவநீத கிருஷ்ணன் – பறிபோன பதவி திமுக செய்தி தொடர்பு செயலாளரும் எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுக பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் எம்பி நீக்கம்: கனிமொழியை புகழ்ந்ததுதான் காரணமா?

அப்போது பேசிய நவநீதகிருஷ்ணன், “மாநிலங்களவைக்குப் புதிதாக சென்றபோது பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. அப்போது டி.கே.ரங்கராஜன், கனிமொழி ஆகியோா் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தனா். ஒரு முறை மத்திய அமைச்சருடன் சண்டை போட நேரிட்டபோது, கனிமொழி தான் என்னை சமாதான படுத்தினார்” எனக் கூறினார். இந்நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீத கிருஷ்ணன் எம்.பி. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என பதிவிட்டுள்ளார்…

தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர் சையது.

Leave a Reply

Your email address will not be published.