ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க

தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சி காலத்தில், ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக புகாரை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவரது முன் ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி அவரை விருதுநகர் மாவட்ட போலீசார் தேடி வந்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் அவர் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரின் செல்போன் தொடர்பு எங்கள் வைத்து தொடர்ந்து கண்காணித்த வந்தனர். இந்த நிலையில் நேற்று ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் நடுரோட்டில் வைத்து கைது செய்தனர்.

செய்தி மீனாட்சி தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.