சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த போலீஸ்:
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சசிகலா சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து பரபரப்பு கூட்டினார். டெல்லியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட அவருக்கு க்ரீன் சிக்னல் கிடைத்ததாகவே கூறப்பட்டது.அதிமுகவுக்குள் சர்ச்சையையும், சசிகலா ஆதரவாளர்களிடம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது இந்த பேட்டி. ஆனால் தமிழக அரசின் சில நடவடிக்கைகளால் சசிகலா அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.