தல அஜித்தின் 60வது படம்!
தல அஜித்தின் 60வது படமாக உருவாகிவரும் வலிமை திரைப்படம்!
ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் 60-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.
வலிமை படத்தை பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதாக கூறப்படுகிறது. கார்த்திகேயா வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
ஓராண்டுக்கும் மேலாக வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் வலிமை திரைப்படம் குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
பரணி,
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.