மணப்பாறை அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி ரயில் பாதையை மறித்து போராட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெரிய பட்டி ஊராட்சி கத்திகாரன்பட்டியை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட மக்கள் சப்வே பாலம் வேண்டாம், மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரி திடீர் ரயில்பாதை மறியலில் ஈடுபட்டனர்.

கே.பெரியபட்டி ஊராட்சி கத்திகாரன்பட்டி இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி, பெரம்பலூர், உள்ளிட்ட பகுதிகளில் சென்று வேலை செய்துவருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் ஆலாம்பட்டி, இனாம்குளத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் ரயில்வே கேட் பல ஆண்டுகளாக செயல்பட்டுவரும் நிலையில் ரயில் வருவதற்கு அரைமணிநேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகவும் எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என கோரி ரயில்வே துறை உயர்அதிகாரிகள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு கத்திகாரன்பட்டி ரயில்வே கேட் அருகே அகல ரயில் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது பற்றி ரயில்வே கேட் காப்பாளர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே உயர்அதிகாரிகள், மணப்பாறை தாசில்தார் சேக்கிழார், மணப்பாறை காவல் ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறியதை தொடர்ந்து சுமார் 2 மணிநேரம் ரயில் சேவை முடங்கியது.
P.பாலு மணப்பாறை செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.