அகஸ்திய ஸ்ரீ அன்புச்செழியன் அவர்களுக்கு டாக்டர் பட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆன்மீகம் மற்றும் சமூக தொண்டாற்றியதற்காக அகஸ்திய ஸ்ரீ அன்புச்செழியன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது ஸ்ரீ அன்புச்செழியன் அவர்கள் தமிழ் மின்னிதழ் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் காலம் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி என நிர்ணயம் செய்து வைத்து இருக்கின்றது . அதனை எப்படி செய்கிறோம் என்பதை பொறுத்தே பாவ புண்ணிய கணக்கானது எழுதப்படுகின்றது . காலம் மனிதனால் அறியப்படாத ரகசியம் .. இந்த புண்ணிய பூமியில் ஒரு ஆலயத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் அதற்கு காலத்தின் கருணையும் பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும் . சித்தர்களின் அனுகிரகம் வேண்டும் . காஞ்சிபுரம் தென் கிழக்கு எல்லையில் உள்ள அப்துல்லாபுரம் கிராமம் .. பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் புராதன சிவன் கோயில் தடை பட்டுநின்ற நிலையில் நம்மை தொடர்பு கொண்டார்கள் .. அகத்திய மகா முனியின் கருணையினால் ஆலயத்திற்கு சென்று பார்வையிட்டேன் .. மூலதானத்தில் லிங்க வடிவம் இல்லாத நிலையில் புதியதாக ஆகம விதிப்படி அபூர்வ லிங்க வடிவங்களில் ஒன்றான முகலிங்க வடிவத்தை வடிவமைக்க ஆரம்பித்தேன் .என் உணர்வுகளோடு கலந்து திருப்பணியும் இறைபணியும் செய்யும் சிவ ஸ்ரீ . தனலட்சுமி அம்மா மற்றும் குழுவினரும் என்னோடு இணைந்து இந்த புனிதமான முகலிங்கத்தை பூர்த்தி செய்தோம் . காலம் சரியாக இந்த பூமியில் இந்த லிங்கத்தை தன்னோடு சேர்த்துக்கொண்டது . ஆலயம் குடமுழுக்கு கண்டது .. பஞ்ச முக லிங்க வடிவத்தின் முகலிங்கமான சந்திரமவுலீஸ்வர மகா லிங்கம் இந்த தேசத்திற்கு அருள் வழங்கி கொண்டு இருக்கின்றது . பரமேஸ்வரனான இறைவன் ஒவ்வொரு செயலுக்கும் ஒருவரை தேர்வு செய்கின்றான் . என்னோடு சந்திர மவுலீஸ்வர முகலிங்கத்தை இந்த காஞ்சி மா நகருக்கு அர்ப்பணித்த அகஸ்திய கிருபா அன்பர்கள் மற்றும் சிவ ஸ்ரீ தனலட்சுமி அம்மா குழுவினர்கள் அனைவருக்கும் கிராம மக்களுக்கும் என் ஆசியை சமர்ப்பணம் செய்கின்றேன் .. அகஸ்திய ஸ்ரீ அன்புச்செழியன் மேலும் அவர் சமூகப் பணி சிறப்பாக செய்ய தமிழ் மின்னிதழ் செய்தி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்று சென்றோம்
தமிழ் மின்னிதழ் செய்திக்காக வேல்முருகன்