அடுத்தடுத்து விபத்துக்குள்ளான மூன்று பேருந்துகள் …
மதுராந்தகம் ஜானகி புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து உட்பட அடுத்தடுத்து விபத்துக்குள்ளான மூன்று பேருந்துகள் … திருச்சியிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஜானகிபுரம் பகுதியில் திடீரென லாரி நிலைதடுமாறி உள்ளே வந்ததால் உடனடியாக திடீர் பிரேக் பயன்படுத்தி வாகனத்தை நிறுத்த முயற்சித்துள்ளார் இதனால் பின்னால் வந்த 2சொகுசு பேருந்துகள் ஒரு கார் உட்பட ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது காரில் வந்தவர்கள் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தவர்கள் இரண்டு பெண்கள் 2 குழந்தைகள் உட்பட ஒரு டிரைவர் மொத்தம் ஐந்து பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் இவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இந்த விபத்தின் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது தகவலறிந்து மதுராந்தகம் காவல் துறையினர் உடனடியாக விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்து மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்
செய்தி வேல்முருகன்