காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு…
மணப்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய காவல்துறையினர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல்நிலையத்தில் பெண் காவலர் திவ்யா.இவருக்கும் மட்டைபறைபட்டியை சேர்ந்த விவசாயியான கோபி என்பவருக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் திவ்யாவிற்கு காவல்துறையினர் வளைகாப்பு வைபவம் செய்ய திட்டமிட்டனர் அதன்படி காவல் துணை கண்காணிப்பாளர் த.ஜனனிபிரியா, ஆய்வாளர் கருணாகரன், ஆகியோர் தலைமையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, காவல் நிலையத்திற்கு தம்பதிகள் மற்றும் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு மாலை அணிவித்து நலுங்கு வைக்கப்பட்டது. உறவினர்கள் முதலில் வலையல் காப்புக்களை அணுவித்ததை அடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் த.ஜனனிபிரியா மற்றும் பெண் காவலர்கள் திவ்யாவிற்கு நலுங்கு வைத்து வளையல் அணிவித்தனர். நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் த. சேக்கிழார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் எம்.சுப்பையா, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர், விழாவில் 7 வகையான சாதத்துடன் விருந்து அளிக்கப்பட்டது,
செய்தியாளர் P.பாலு மணப்பாறை