மழை நீர் வடிகால்கள் எங்கே?
ஆயிரக்கணக்கான கோடிகளில் உருவான மழை நீர் வடிகால்கள் எங்கே? சென்னை
சாலைகள்
இன்று பல் இலிப்பது ஏன்?
சென்னை: ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து போடப்பட்ட மழை நீர் வடிகால்கள் மற்றும் சாலைகள் சென்னையில் இன்று பல் இலிப்பது ஏன்? என்ற கேள்விகள் எழுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் தரமான சாலைகள் எல்லாம் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் இடைவிடாமல் பெய்த கனமழையால் மிதக்கின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 695.31 கி.மீ. நீளமுள்ள 4,254 மழைநீர் வடிகால்களில் 948 எண்ணிக்கையிலான மழைநீர் வடிகால்களில் சிறு பழுதுகளை சரிபார்த்து பராமரித்தல் மற்றும் 6,891 இடங்களில் உடைந்த நிலையில் உள்ள மனித நுழைவுவாயில் மூடிகளை மாற்றம் செய்யும் பணிகள் நடந்ததாக சென்னை மாநகராட்சி கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தலைநகரில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. மெரினாவில் தேங்கிய மழை நீர் தலைநகரில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. மெரினாவில் தேங்கிய மழை நீர்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 469.07 கிமீ நீளமுள்ள 2,893 மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளும், 69 சிறு பழுதுகள் நீக்கும் பணியும் முடிவுற்றுள்ளன. மேலும், 722 இடங்களில் மனித நுழைவு வாயில் மூடிகளும் மாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தண்ணீர் தேசம்
குளமான சாலைகள்
இந்த அறிக்கை வெளியான நாள் என்பது செப்டம்பர் மாத இறுதியாகும். 45 முதல் 50 நாளில் இப்போது பெரு மழை பெய்துள்ளது. அதுவும் எப்படி, வெறும் 7 மணி நேரத்தில் 20 செமீக்கு மேல் மழை பெய்துள்ளது. இன்னும் சென்னையில் சில பகுதிகளில் மழை நிற்கவில்லை. வெள்ளநீர் வடிகால்கள் எல்லாம் தண்ணீர் மூழ்கிகிடக்கின்றன. சாலைகளும், அதற்குள் இருக்கும் சென்டர்மீடியன்களும் மழையை தேக்கி வைக்கும் குளமாக காட்சியளிக்கின்றன.
சுரங்கப்பாதைகள்
ஏரிகளில் வீடுகள்
சுரங்கப்பாதைகள் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் மூழ்கி கிடக்கின்றன. மின்மோட்டார்களை வைத்து தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. ஒரு காலத்தில் ஏரிகளாக இருந்த பகுதிகள், மனிதனின் பேராசையால் வீடுகள் ஆகின. அப்படி சென்னையில் மட்டும் எத்தனை பகுதிகள் என்பது பலருக்கும். வேளச்சேரி தொடங்கி , கோயம்பேடு, முகப்பேரு, கொரட்டூர் என பல பகுதிகளில் ஏரிகளை காலிசெய்துதான் குடியிருப்புகள் உருவாகின.
ஆக்கிரமிப்புகள்
2015 மழை பாடம்
ஒரு பக்கம் மழைநீர் செல்லும் வடிகால்களை ஆக்கிரமித்து வீடுகளை, கட்டிடங்களை கட்டிவிட்டு, மறுபக்கம் மழைநீரில் மிதப்பதை எண்ணி வருந்துவதில் எந்த பிரோஜனமும் இல்லை. 2015ல் மழை நீர் வடிகால்கள் சரியாக இருந்திருந்தால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது இருக்காது. இதேபோல் கூவம், அடையாறு ஆற்றக்கரையோரத்தில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் இருந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
இடித்துதள்ளுங்கள்
வெள்ளச்சாலைகள்
2015ல் நாம் கற்றுக்கொண்ட பாடத்தை அடிக்கடி இயற்கை காட்ட விரும்புகிறது. இனியும் விழித்துக்கொள்ளாவிட்டால் சென்னையின் சோகத்தை தவிர்க்க முடியாது. எப்போது பெரு மழை வந்தாலும் வெள்ளம் வடியும் அளவிற்கு அனைத்து சாலைகளிலும் மழைநீர் வடிகால்களை மாற்றியமைக்க வேண்டும். மழைநீர் செல்லவிடாமல் தடுத்து ஆக்கிரமித்த கட்டிடங்களை தயவு தாட்சணை இன்றி இடித்து தள்ளி சரி செய்வதே சிறப்பான நடவடிக்கையாகும்.
பருவ நிலை
இடித்து தள்ளுங்கள்
பருவநிலையை மோசமாக்கிவிட்டதால் பெருமழைகள் இனி அடிக்கடி வரும்.வறட்சியும் அடிக்கடி வரும். இதை சரிசெய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எனவே இருக்கும் சாலைகளையும் , மழைநீர் வடிகால்களையும் முறையாக பராமரிப்பது மட்டுமே நம் முன்பு உள்ள ஒரே வாய்ப்பு. சாலைகள் போடுவதில் நடக்கும் ஊழலை சரிசெய்தால் தான், சாலைகளுக்கு விடிவு காலம் பிறக்கும்.இந்த பல விவகாரத்தில் முதல்வரே தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுத்தால் சிறப்பான முடிவு கிடைக்கும்…… செய்தியாளர் சையது தமிழ் மலர் மின்னிதழ்