எட்டு வடிவில் நடைப்பயிற்சி பலன்கள்

எட்டு வடிவில் நடைப்பயிற்சி பலன்கள்

எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்தால் மனிதன் நோய் இன்றி வாழலாம். எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யும் போது காலணி (செருப்பு) அணிய கூடாது. அப்போதுதான் புவிஈர்ப்பு சக்தியின் மூலமாக மனிதனின் உடலில் உள்ள தீய சக்தி வெளியேறும். எட்டு வடிவில் நடைப்பயிற்சியினை எல்லோரும் செய்யலாம்.

எட்டு வடிவ நடைப் பயிற்சி எங்கு எப்படி செய்ய வேண்டும் என்றால் மண் தரை, சிமெண்டு தரை, தார்ரோடு, சிமெண்ட் ரோடு போன்ற இடங்களில் செய்தால் நல்ல பயன் கிடைக்கும். மூன்றுவிதமான அளவுகளில் எட்டு வடிவ நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம்.

எட்டு வடிவ நடைபயிற்சி செய்ய வேண்டிய அளவு வருமாறு:

  1. 4 அடி அகலம் 5 அடி நீளம்.
  2. 6 அடி அகலம், 9 அடி நீளம்.
  3. 6 அடி அகலம் 15 அடி நீளம் என 3 வகை அளவுகள் இருக்கலாம்.

அவரவர்களுக்கு இருப்பிட சூழ்நிலைக்கு ஏற்ப அளவுகளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். தரையில் சாக்பீஸ் அல்லது கோலம் கொண்டு வரைந்து கொள்ளவும்.

தரையில் எட்டு போட்டால் உடலில் உள்ள நோய்களை இயற்கையாக குணப்படுத்தலாம். இதன் நீளவட்டம் வடக்கில் இருந்து தெற்காகவும், குறுக்குவட்டம் கிழக்கில் இருந்து மேற்காகவும் அமைக்கவும். முடிந்த வரை வடக்கு, தெற்குதான் இருக்க வேண்டும். இடவசதியில்லாதவர்கள் கிழக்கு, மேற்கு அமைக்கலாம்.

இரவு உணவுக்குப் பின்பு 45 நிமிடம் கழித்து வரைந்த வடிவ எட்டு மீது 30 நிமிடம் நடக்கவும். முதலில் வடக்கு இருந்து தெற்காக 15 நிமிடம் பின்பு தெற்கில் இருந்து வடக்காக 15 நிமிடம் நடந்தால் நாம் உண்ட உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகி அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கும் வகையில் அமையும். ஆழ்ந்த நிலை தூக்கம் நடைபெறும். மலச்சிக்கல் இருக்காது. மனம் ஒருநிலைப்படும்.

எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்வதால் இயற்கையாகவே உடலில் உள்ள 17 வகை நோய் நீங்கும்

  1. அஜீரணம்,
  2. மலச்சிக்கல்,
  3. இருதயம் சீராகும்.
  4. மூச்சு திணறல்,
  5. மூக்கடைப்பு,
  6. மார்புச்சளி,
  7. கெட்ட கொழுப்பு கரையும்,
  8. உடல் எடை குறையும்,
  9. மனஅழுத்தம்,
  10. ரத்த அழுத்தம்,
  11. தூக்கமின்மை,
  12. கண் பார்வை தெளிவாகும்,
  13. கெட்டவாயு வெளியேறும்,
  14. சக்கரங்கள் சமநிலையில் இயங்கும்,
  15. தலைவலி, பின்பக்க தலைவலி சரியாகும்,
  16. குதிகால் வலி, மூட்டு வலி, சரியாகும்,
  17. சர்க்கரை நோய் சரியாகும்.

குறிப்பு : ஆரம்பித்த அன்றே 30 நிமிடம் நடக்க வேண்டாம் முதல் மூன்று நாட்கள் வடக்கு இருந்து தெற்காக 5 நிமிடம் தெற்கில் இருந்து வடக்காக 5 நிமிடம் என்று நடந்து பின் வரும் நாட்களில் நேரத்தை படிப்படியாக கூட்டிக் கொள்ள வேண்டும்.

கருவுற்ற பெண்கள், புற்று நோய் உள்ளவர்கள் செய்யக்கூடாது

வே. இராஜவர்மன் டில்லி தலைமை செய்தி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.