பல்லடம் அருகே விபத்தில் சிறுவன் பலி
பல்லடம் அருகே விபத்தில் சிறுவன் பலி பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்த மாறன் மகன் வெற்றிவேல் வயது 14 இந்தநிலையில் நேற்று மாலை இந்த சிறுவன் மற்றும் இரண்டு சிறுவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக சென்ற வாகனத்தின் மீது இவர்கள் மீது மோதியதா என்று தெரியாத நிலையில் விபத்து ஏற்பட்டு 3 பேர் படுகாயமடைந்தனர் அருகில் உள்ளவர்கள் மூன்று சிறுவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு வெற்றி வேலை பரிசோதித்த டாக்டர் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தார் மற்ற சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்