சமூக நீதி உறுதிமொழி..
சமூக நீதி போராளி, பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சிந்தனையாளர், திராவிட பேரரசர், தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி தினமாக கொண்டாடப்பட வேண்டும், சமூக நீதி உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணையேற்று, (17.09.2021) சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தொகுதி, மதுரவாயல் தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா, சமூக நீதி தினமாக 150-வது வட்டம், காரம்பாக்கம் அண்ணா சிலையருகில், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், அன்பிற்கினிய மக்கள் சேவகர், மாண்புமிகு காரம்பதக்கம் க. கணபதி, MLA, அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டு, தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி, சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. உடன் பகுதி கழக அவைத் தலைவர், துணை செயலாளர், வட்ட செயலாளர்கள், கழக அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர், பகுதி-வட்ட கழக நிர்வாகிகள், தோழர்கள், கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்துக்கொண்டனர்.