கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்..
தமிழக அரசின் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் E.கருணாநிதி MLA தொடங்கி வைத்தார்
தமிழக அரசு உத்தரவின் படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு/ ராகுல் நாத் அவர்களின் அறிவுரையின் படி செங்கல்பட்டு மாவட்டம் முழுக்க ஒரே நாளில் ஒரு
லட்சம் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் 12/09/2021 ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இதனையொட்டி பல்லாவரம் நகராட்சி
மற்றும் பட்டேல் நகர் குடியிருப்போர் நல சங்கம்
இணைந்து குரோம்பேட்டையில் உள்ள அய்யாசாமி
மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்தினர்.
இந்த முகாமை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்
இ. கருணாநிதி MLA துவக்கி வைத்தார். இந்த சிறப்பு முகாமில் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
உடன் நகராட்சி
ஆணையர் காந்திராஜன், நகராட்சி பொறியாளர் லதா, மற்றும் பட்டேல் நகர் குடியிருப்போர் நல சங்க
செயலாளர் அரிமா கோவிந்தராஜன், சுகாதார அலுவலர்
கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ஜெகதீசன், நகராட்சி
வருவாய் அலுவலர் சுரேஷ், நகராட்சி வருவாய்
ஆய்வாளர் சிவக்குமார், மற்றும் சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: S.MD. ரவூப்