பொறுப்பற்ற பெற்றோர்கள்… அப்பா தான் முதல் குற்றவாளி – வைரலாகும் தமிழக காவல் அதிகாரியின் வீடியோ

சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் இளைஞர்கள் பாதுகாப்பு ஏதும் இன்றி பயணம் செய்வதற்கு அவர்கள் பெற்றோர்களே முதல் குற்றவாளி என தமிழ்நாட்டின் காவல் துறை அதிகாரி ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த காணொளியில், சாலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ள இரண்டு இளைஞர்களின் பெற்றோர்களும் பொறுப்பற்றவர்கள். 18 வயது நிரம்பி முறைப்படி லைசன்ஸ் வாங்காமல் வண்டியை ஓட்டக் கொடுத்த அப்பா முதல் குற்றவாளி. பெரிய வண்டி 380 சிசி, 17 வயது சிறுவன் 50 கிலோ எடை இருந்திருப்பான் அவனுக்கு அந்த வண்டியை பிடிக்க முடியுமா? முடியாது பெற்றோர்கள் தான் பொறுப்பாக நடக்க வேண்டும். ஹெல்மெட் போடவேண்டும் என ஏன் கூறுகின்றோம் எனத் தெரியுமா? முதலில் கீழே விழுந்தவுடன் தரையில் தலையில் தான் அடி நிச்சயம் படும். யாரும் பைக்கில் எதிரிகளை கூட்டிச் செல்லவில்லை.

நண்பர்களைத் தான் கூட்டிச் செல்கின்றீர்கள். அளவு சரி இல்லாத, தரம் இல்லாத ஹெல்மெட்களை அணியாதீர்கள். ரோட்டு கடையில் பிழைப்பிற்காக விற்கும் ஹெல்மெட்களை வாங்க வேண்டும். வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவருக்கு ஹெல்மெட் கட்டாயம். அளவு சரி இல்லாத ஹெல்மெட் போட வேண்டாம். ஒரே ஹெல்மெட் வச்சு ஒரு வீட்டில் 3 பேர் வண்டி ஓட்ட வேண்டாம். ஹெல்மெட் கடையில் சென்று தலையில் போட்டு பார்த்து வாங்குங்கள்.

ஹெல்மெட்டை ஒவ்வொரு முறை கழட்டி போடும் போதும் அதன் உள்ளே கொடுக்கப்படும் அட்ஜெஸ்ட்மண்ட் chin strap என கூறுவர் அதனை கட்டாயம் போட வேண்டும். நாங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டு தான் உள்ளோம். பலர் இதனை போடுவதே இல்லை. என காவல்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

சமீபத்தில் இளைஞர் சிலர் கூட்டமாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல், விதிமுறைகள் கடைபிடிக்காமல் ஒ.. ஆ.. என ஆட்டம் போட்டு கொண்டு பைக்கில் ஊர் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில், நண்பர்களோடு சேர்ந்து இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சிலர் கூட்டமாக சாலையில் வலம் வந்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வீடியோவில் இளைஞர்கள் கூட்டமாக பைக்கை ஓட்டி வருகையில் ஒருவர் வளைந்து நெளிந்து ஸ்டைலாக பைக்கை ஓட்ட நினைத்து அதனை அருகில் இருந்துவரும் அப்படியே பின்பற்றி உள்ளார். பின்னர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். தலையில் யாரும் ஹெல்மெட் போடாதவாறு, விதிமுறையை எதையும் பின்பற்றாதவாறு இருசக்கர வாகனத்தை இயக்கி உள்ளனர். இந்த வீடியோ சமீபத்தில் வைரலாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.