பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் டேங்கர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் இருந்து ஏர்போர்ட் செல்லும் நெடுஞ்சாலையில் (09/09/2021) வியாழக்கிழமை மதியம் 2.00p.m மணி அளவில் ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தலைக்கவசம், முகக் கண்ணாடி முககவசம், விற்பனை செய்து வந்த நபர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே விற்பனை செய்து வந்த தொழிலாளி உடல் நசுங்கி மரணம் அடைந்தார்.

தகவலறிந்து வந்த ஏர்போர்ட் போக்குவரத்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:S.MD. ரவூப்

Leave a Reply

Your email address will not be published.