மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் சாலைகளில் உள்ள பள்ளங்கள் குறித்து ஆடியோ எச்சரிக்கை அம்சம் விரைவில் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் விரைவில் “கார்-டு-எக்ஸ்” என்ற குழிகள் எச்சரிக்கை செயல்பாட்டை கொண்டு வர இருக்கிறது. இந்த சேவையானது “மெர்சிடிஸ் மீ” என்ற அக்கவுண்ட்டை கொண்ட ஓட்டுநர்களுக்கு ஐகான்கள் மற்றும் ஆடியோ விழிப்புணர்வு அம்சம் மூலம் சாலையில் குழிகள் இருந்தால் ஆபத்தான பகுதி என்ற ரியல் டைம் எச்சரிக்கையை கொடுக்கிறது. சாலைகளில் இருக்கும் குழிகள் வாகனத்தின் டயர்களை சேதப்படுத்துவது மட்டுமின்றி, விபத்துக்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கும் என்பது அனைத்து ஓட்டுனர்களுக்கும் தெரியும் என்பதால், இந்த எச்சரிக்கையை பெரும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பகுதிகளில் கவனமாக செல்ல வாய்ப்புகள் உள்ளது.

எனவே மெர்சிடிஸ் பென்ஸ் எதிர்கால வாகனங்களில் குழிகள், பள்ளங்கள் குறித்து எச்சரிக்கை அனுப்பும் அம்சத்தை அனைவரும் வரவேற்கின்றனர். சமீபத்திய மாடல்களில் ஒன்றின் சேஸ் கன்ட்ரோல் யூனிட், சாலைகளில் குழிகள் அல்லது பள்ளங்கள் இருந்தால் அதனை கவனித்து பதிவு செய்து உடனடியாக செல்போன் நெட்வொர்க் வழியாக மெர்சிடிஸ் பென்ஸ் கிளவுட்டுக்கு அனுப்பப்படும் மற்றும் எச்சரிக்கையின் துல்லியமான இருப்பிடத்தின் பகுதியையும் அனுப்பும் சேவையை சோதனை செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் மூலம் அந்த குறிப்பிட்ட வாகனம் மட்டுமின்றி, அருகிலுள்ள அனைத்து மெர்சிடிஸ் கார்களும் தங்கள் வழி செல்லும் வரைபடத்தில் ஒரு சிறிய எச்சரிக்கை ஐகான் மூலம் அபாயமான பகுதி என ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும். மேலும் ஆபத்து பகுதியான சாலையை அடைவதற்கு சுமார் 10 வினாடிகள் முன்பு காரின் திரையில் ஐகான் மூலம் தெரிவிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் கார்கள் ஏற்கனவே “கார்-டு-எக்ஸ்” சேவை மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு ஆபத்து தெரிந்து கொள்ளும் அம்சத்தை பெற்றுள்ளது, தற்போது புதிய சி-கிளாஸ், எஸ்-கிளாஸ் மற்றும் ஈக்யூஎஸ் மாடல்களில் ஆடியோ மூலம் எச்சரிக்கை அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எச்சரிக்கையானது 36 மொழிகளில் கிடைக்கிறது. அதில் பள்ளங்கள் அல்லது குழிகள் உள்ளது, கவனம் வேகத்தடை என்ற வார்த்தைகள் அடங்கிய எச்சரிக்கையானது ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் என தகவல் அளித்துள்ளனர்.

Also read… டாடா முதல் ஹூண்டாய் வரை… முன்னணி கார் நிறுவனங்கள் வழங்கும் சிறந்த மின்சார வாகனங்கள்!

இதனிடையே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஐ.ஏ.ஏ. ஆட்டோ விழாவில் தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. முன்னதாக 4 புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது இ.கியூ.பி. மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் கார் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு இதே மாடல் இ.கியூ.பி. 300 மற்றும் இ.கியூ.பி. 350 என இரண்டு வேரியண்ட்களில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. புதிய இ.கியூ.பி. ஏழு இருக்கைகள் கொண்ட முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். புதிய எலெக்ட்ரிக் காரில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 66.5 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கி இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 419 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.