அஸ்தினாபுரம் லயன்ஸ் கிளப் ஆசிரியர் தின விழா!
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் அஸ்தினாபுரம் சார்பாக 2021-2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தினவிழா (06/09/2021) திங்கள்கிழமை மாலை 5:30p.m மணி அளவில்
நேரு நகர் மாதர் சங்கம், எண்:20 ஆஞ்சநேயர் கோவில் தெருவில் லயன்ஸ் கிளப் தலைவர் திரு/ ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆசிரியர் தின விழாவில் நன்றாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு மற்றும் பள்ளி மாணவிகளுக்குசான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியர் தின விழாவிற்கு லயன்ஸ் கிளப் குடும்பத்தினரை வரவேற்பதில் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் நிர்வாகி திரு/ ராமசாமி மிகவும் ஏழ்மையான மாணவியின் படிப்பு செலவு அனைத்தும் தான் ஏற்பதாக உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் அனைவரும் மாணவியின் படிப்புச் செலவை ஏற்ற லயன்ஸ் கிளப் நிர்வாகி ராமசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
செய்தி: S. ரவூப்