மாற்று வாக்காளர் புகைப்பட அட்டை இலவசம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட அறிவுரையினை செயல்படுத்திடும் விதமாக இ-சேவை மையங்களில் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும், வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 342 அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் 1.10.2021 முதல் நடைமுறைக்கு வரும். எனவே, வாக்களர்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
செய்தியாளர் சையது தமிழ் மலர் மின்னிதழ்