கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம்
தமிழக அரசின் உத்தரவின்படி வருகின்ற 12/09/2021 ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து பம்மல் நகராட்சி பகுதியில் கொரோனா நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர், பம்மல் நகராட்சி ஆணையாளர் திருமதி /மாரிச்செல்வி அவர்களின் ஆலோசனைப்படி மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் வருகின்ற 12/09/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00a.m. மணி முதல் மாலை 7:00p.m. மணி வரையில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.
தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்கள் பம்மல் நகராட்சி பகுதியில் நடைபெற உள்ள இடங்கள்:
சங்கர் நகர் பூங்கா, பஞ்சாயத் காலனி பூங்கா, வ உ சி நகர் பூங்கா, கே எம் ஏ சி எஸ் ஐ பள்ளி, கிருஷ்ணா நகர் ICDS, பசும்பொன் நகர்ICDS, வடிவேல் தெரு H.L காலனி, ஆரம்ப சுகாதார நிலையம் காந்தி ரோடு அண்ணா நகர், விக்னேஷ் மஹால் அண்ணா நகர், முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி ICDS, பொன்னி நகர் ICDS, ஈஸ்வரன் நகர் அசோஷியேஷன் பில்டிங், காந்தி நகர் EXTN, பூங்கா, ஜமால் பேலஸ் பெரியார் நகர், நூறு மஹால் நேரு நகர், சோங்கு வேல் தெரு பெரியார் நகர், இரட்டைமலை சீனிவாசன் தெரு நாகல்கேணி, சென்ட்ரல் பாங்க் காலனி சோழவரம் நகர் நாகல்கேணி, மினி கிளினிக் அண்ணாசாலை நாகல்கேணி, இந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென பம்மல் நகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது
செய்தி:S.MD. ரவூப்