IIT Madras: தேசிய அளவில் சிறந்த கல்வி நிலையங்கள்: அசத்தும் தமிழகம்

EDUCATION
IIT Madras: தேசிய அளவில் சிறந்த கல்வி நிலையங்கள்: அசத்தும் தமிழகம்
ஐஐடி மெட்ராஸ்
சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து மூன்றாவது அண்டாக தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதேபோல் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
NEWS18 TAMIL
LAST UPDATED : SEPTEMBER 09, 2021, 18:00 IST
SHARE THIS:

GEEDAN CHURCHILL News18 Tamil Nadu
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை தர நிர்ணயம் செய்யும் தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை கடந்த 2016ம் ஆண்டு முதல் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று சிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசை 2021 ஐ வெளியிட்டார். பொறியியல், மருந்தகம், மேலாண்மை, ஒட்டுமொத்த, ஆராய்ச்சி போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்கல்வி பயிற்சி, வளங்கள், பட்டதாரிகள் உருவாக்கம், தொழிற்கல்வி பயிற்சி, வெளிப்பாடு மற்றும் உள்ளடக்கம் நிறுவனத்தின் கண்ணோட்டம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டு தரவரிசை பட்டியலில், சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து மூன்றாவது அண்டாக தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதேபோல் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தலைச்சிறந்த 100 பல்கலைக்கழகம் வரிசையில் கோவை அமிர்தா 16வது இடத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் 20வது இடத்தையும் பாரதியார் பல்கலைக்கழகம் 21வது இடத்தையும் பிடித்துள்ளது.

.
தேசிய அளவிலான பட்டியலில் இடம்பிடித்த தமிழகத்தின் சிறந்த கல்லூரிகள்:

பொறியியல்
ஐ ஐ டி மெட்ராஸ் – முதலிடம்
NIT திருச்சி-9வது இடம்

கோவை அமிர்தா 16 வது இடம்
அண்ணா பல்கலைக்கழகம்-18வது இடம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் 36வது இடம்

தலைச்சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள்

சென்னையில் உள்ள இலயோலா கல்லூரி-3வது இடமும்

கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி 6வது இடமும்

சென்னையில் உள்ள பிரசிடென்சி.கல்லூரி -7வது இடமும் பிடித்துள்ளன

சென்னை எத்திராஜ் கல்லூரி 51வது இடம்

சென்னை குயின் மேரிஸ் கல்லூரி 55வது இடம்

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி 58வது இடம்

மருத்துவம்
தேசிய அளவில் வேலூர் CMC மருத்துவக் கல்லூரி 3ம் இடம் பிடித்துள்ளது.
இதையும் படிக்க: அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் க.பொன்முடி

பிற கல்லூரிகள்

சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் ஐ.எஸ்.எஸ். பெங்களூரு 2வது இடத்திலும் ஐஐடி பாம்பே மூன்றாவது இடத்திலும் உள்ளன. சிறந்த மருத்துவ கல்லூரிக்கான பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதல் இடத்தில் உள்ளது. சண்டிகர் (PGIMER Chandigarh) இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.

சிறந்த மேலாண்மை நிறுவனம் என்ற பிரிவில் ஐஐஎம் அகமதாபாத் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஐஐஎம் பெங்களூரு இரண்டாம் இடத்திலும், கொல்கத்தா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.