நேரக்கட்டுப்பாடு நீக்கப்படும்
சென்னை புறநகர் ரயில்களில் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் பெண் பயணிகள் பயணிக்க நேரக்கட்டுப்பாடு நீக்கப்படும் என்று, தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சென்னை புறநகர் ரயில்களில், பெண் பயணிகள் பயணிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. குறிப்பாக, பெண்களுடன் 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு புறநகர் ரயில்களில் பயணிக்க தடை விதித்து இருந்தது.
இந்நிலையில், சென்னை புறநகர் ரயில்களில் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் பெண் பயணிகள் பயணிக்க நேரக்கட்டுப்பாடு நீக்கப்படும் என்று, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டிசம்பர் 14-ஆம் தேதி முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பெண் பயணிகள் நேரக்கட்டுப்பாடின்றி அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம்.
பெண்களுடன் 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களும் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் மார்க்க ரயிலும் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் செயல்படும்” என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.