அவன் – இவன் பட வழக்கில் இருந்து இயக்குநர் பாலாவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு!
அவன்- இவன் திரைப்டத்தில் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் இருக்கும் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்ததாக படம் வெளியான போதே சர்ச்சைகள் எழுந்தது.
2011-ம் ஆண்டு இயக்குனர் பாலா கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நடித்து வெளியான அவன் -இவன் திரைப்படம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டது. இதில் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் இருக்கும் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்ததாக படம் வெளியான போதே சர்ச்சைகள் எழுந்தது.
இந்த நிலையில் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகேச தீர்த்தபதி மற்றும் தங்களது குலதெய்வமான சொரிமுத்தையனாரையும் அவதூறாக சித்தரித்து படம் வெளியிடப்பட்டுள்ளது எனக்கூறி சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கர ஆத்மஜன் தயாரிபு நிறுவனமான கல்பாத்தி அகோரம், இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். கல்பாத்தி அகோரம் ஜமீன் குடும்பத்துடன் சமாதானம் பேசி தன்னை வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டனர்.
வழக்கின் விசாரணை அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றனர். இதனால் சில ஆண்டுகள் வழக்கு விசாரணை நடைபெறாமல் இருந்தது. தடை நீங்கிய நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்த நிலையில் நடிகர் ஆர்யா இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குனர் பாலா மீது மட்டும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது கடந்த இரண்டு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத இயக்குனர் பாலா இன்று நடைபெறும் இறுதி விசாரணை மற்றும் தீர்ப்பிற்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.