சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது தவறு – பாமக

 கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலை உயருவது பொதுவானது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் இருந்து எரிவாயு விலை உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டது தவறு அதனை திரும்பப் பெற வேண்டும் என  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு  ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 
தனது ட்விட்டர் பதிவில், ‘ வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை 850 ரூபாயிலிருந்து ரூ.875 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கக் கூடியதாகும்!’ என பதிவிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.